திண்டுக்கல்

பழனி மாணவர்கள் தேசிய தடகளப் போட்டிகளில்தங்கம் வென்று சாதனை

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய தடகளப்போட்டிகளில் பழனியை சேர்ந்த மாணவரும், மாணவியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

DIN

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய தடகளப்போட்டிகளில் பழனியை சேர்ந்த மாணவரும், மாணவியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த மாதம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாநில தடகள போட்டிகள் நடைபெற்றன.  இதில் பழனியைச் சேர்ந்த மாணவர் ஹரிபிரசாத் மற்றும் மாணவி சுகைனாபானு ஆகியோர் பங்கேற்று தேசிய தடகளப்போட்டிகளுக்கு தேர்வாகினர். இவர்கள் கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
10 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் 17 வயதுக்கு உள்பட்டோர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், மாணவர் ஹரிபிரசாத் 200 மீட்டர் ஓட்டத்தில் 24 வினாடிகளில் எல்லையைத் தொட்டு தங்கப்பதக்கம் வென்றார். மேலும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தமிழக பிரிவில் தங்கம் பெற்றுள்ளார்.  மாணவி  சுகைனாபானு 200 மீட்டர் ஓட்டத்தில் 35 விநாடிகளில் எல்லையைத் தொட்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். 400 மீட்டர் ஓட்டத்தில் 1.3 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்றவர்களை பயிற்சியாளர் நவீன்குமார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். 
வெற்றி பெற்ற இருவரும் அடுத்த மாதம் ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT