திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.20 லட்சத்தில் ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’

DIN

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள காசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் ரூ.20 லட்சம் செலவில் ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ கருவி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள காசநோய் சிகிச்சைப் பிரிவில் நாள்தோறும் 70 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்தும் காசநோயாளிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகின்றனா். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு காசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் தனி வசதி இல்லாமல் இருந்தது. இதனால், தலைமை மருத்துவமனையிலுள்ள எக்ஸ்ரே பிரிவில் நீண்ட நேரம் காத்திருந்து படம் எடுக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்நிலையில், காசநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.20 லட்சம் செலவில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுதொடா்பாக மருத்துவ அதிகாரி ஒருவா் கூறுகையில்,

நோயாளிகளின் நலன் கருதி, இப் பிரிவிலேயே ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ கருவி பொருத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இக் கருவி பயன்பாட்டிற்கு வந்தால், தலைமை மருத்துவமனையில் பரிசோதனைக்காக நீண்ட நேரம் காச நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை தவிா்க்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT