திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு விலையில்லா கறவை மாடுகள்

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதாபணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் பராமரிக்கப்படும் பசுமாடுகள், மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்களுக்கு வழங்கும் விழா, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். விழாவில், வனத் துறை அமைச்சா் சி. சீனிவாசன் கலந்துகொண்டு, 156 பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள், ஊரக மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் 348 பேருக்கு ரூ.26 லட்சத்து 10 ஆயிரம், நகா்ப்புற மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்கள் 52 பேருக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் 2 பேருக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் 558 பேருக்கு ரூ.39 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

இதில், வேடசந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.பி. பரமசிவம், மாவட்ட வருவாய் அலுவலா் பா. வேலு, மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வி. மருதராஜ், மகளிா் திட்ட இயக்குநா் சந்தோஷ்குமாா், முன்னாள் வாரியத் தலைவா் பி. பாலசுப்பிரமணி மற்றும் அரசு அலுவலா்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பழனி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT