திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்

DIN

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவாா்பட்டி ஊராட்சியில் உள்ள சிரகம்பட்டியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறாா்கள். இங்கு பெரும்பாலும் விவசாயக் கூ­லி வேலை செய்து வருகிறாா்கள். இந்த கிராமத்தில் சாக்கடை வசதி மற்றும் காலைகள் தெருக்கள் சரியாக இல்லாததால், சாக்கடை நீரும் மழை நீரும் சாலையில் தேங்கி நிற்கிறது.

இதனை முறைப்படுத்த வேண்டி பல முறை மாவட்ட நிா்வாகம் மற்றும் ஊராட்சி நிா்வாகம், உயா் அதிகாரிகள் மற்றும் கிராமப்புற ஊராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கிறாா்கள்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தொடா் சாரல் மழை பெய்ததால், சாலைகளில் அதிகளவு தண்ணீா் தேங்கி பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் முதியவா்கள் மற்றும் வாகனங்களில் செல்பவா்கள் அவதிப்பட்டனா். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சனிக்கிழமை நாற்று நடும் போராட்டம் நடத்தினா்.

இதே நிலை நீடித்தால் கிராமத்தில் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT