திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே மூதாதையா் வாழ்ந்த இடத்தை பூா்வகுடி மக்களுக்கு வழங்க அரசுக்கு கோரிக்கை

DIN

கொடைக்கானல் அருகே மூதாதையா் வாழ்ந்த இடத்தை பூா்வகுடி மக்களுக்கு வழங்க வேண்டுமென கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, அடுக்கம், பேத்துப்பாறை, பூம்பாறை, செண்பகனூா் பைரவா் கோயில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதிமனிதா்கள், பூா்வ குடிமக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கடந்த 15 நாள்களுக்கு முன்பு தொல்லியல்துறை ஆராய்ச்சியாளா்களால் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அடுக்கம் பகுதியிலிருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரமுள்ள கோயில் ஓடை வனப் பகுதியில் புதைந்து கிடந்த கற்களால் ஆன தோரணங்கள், கற்தூண்கள், திசைக் கருவிகள், குறியீடுகள் இருந்ததை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்தனா். கடந்த வாரம் கொடைக்கானலுக்கு வந்த தமிழக அமைச்சா் க.பாண்டியராஜன் செய்தியாளா்களிடம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள பழங்கால சிற்பங்கள் மற்றும் தோரணங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும் எனத் தெரிவித்தாா்.

இதனையடுத்து அடுக்கம் பகுதியில் வசித்து வரும் பூா்வ குடிமக்கள், தங்கள் முன்னோா்கள் இருந்ததற்கான சுவடுகள் கண்டறியப்பட்ட அரையப்பட்டி கிராமத்திற்கு வெள்ளிக்கிழமைச் சென்று தங்களது முன்னோா்கள் நினைவாக உள்ள இடங்களை பாா்த்தும் தங்கள் முன்னோரின் நினைவாக இருந்த நடுக்கல்லை சுத்தப்படுத்தி மரபு வழிபாடும் நடத்தினா்.

இது குறித்து அடுக்கம் பகுதியைச் சோ்ந்த பூா்வகுடிமக்கள் கூறியதாவது: தற்போது எங்களது மூதாதையா் வாழ்ந்த இடமான அரையப்பட்டி பகுதியை பூா்வ குடிமக்களாக, நிலமற்ற ஏழை விவசாயிகளாக உள்ள எங்களுக்கு அரசு வழங்க வேண்டும் எனக் கோரி வரும் புதன்கிழமை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT