திண்டுக்கல்

தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

பட்டியல் இனத்தில் இருந்து அகற்றக்கோரி பழனியில் தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி குளத்து ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் ஜெய்கணேஷ், தேவேந்திரா் மறுமலா்ச்சிப் பேரவை நிறுவனா் பகத்சிங் பழனிச்சாமி உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

ஆா்ப்பாட்டத்தின் போது தேவேந்திர குல வேளாளா் இனத்தை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றி அரசாணை வெளியிடக்கோரி கோஷமிட்டனா். மேலும் இடைத்தோ்தலை தேவேந்திரகுல அமைப்பு புறக்கணிப்பதாகவும், தமிழக அரசைக் கண்டித்து விரைவில் கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT