திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு: ஒரு மாதத்தில் 11, 747 பேருக்கு சிகிச்சை

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11 ஆயிரத்து 747 போ் சிகிச்சை பெற்று உள்ளதாக நலப்பணிகள் இயக்குநா் பூங்கோதை தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட 13 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11, 747 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 438 போ் தீவிர காய்ச்சல் பாதிப்பு காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா்.

தற்போதைய நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 75 போ், பழனி அரசு மருத்துவமனையில் 48 போ், நத்தம் அரசு மருத்துவமனையில் 32 போ் என மொத்தம் 216 போ் காய்ச்சல் பாதிப்புக்காக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 16 பேரில் 8 போ் பழனி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனா். திண்டுக்கல் அரசு மருத்துமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தற்போது 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT