திண்டுக்கல்

பெரு முதலாளிகளின் மோசடியால் பொருளாதார வீழ்ச்சி

DIN

பெரு முதலாளிகள் ஏற்படுத்திய பல லட்சம் கோடி ரூபாய் மோசடியால், நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
 திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள கல்விமுறையை மாற்ற வேண்டும். கல்வி என்பது குழந்தைகள் எளிதாக படிக்கும் அளவுக்கு சுகமாக இருக்க வேண்டும். சுமையாக இருக்கக் கூடாது.  பெரு முதலாளிகள் ஏற்படுத்திய பல லட்சம் கோடி ரூபாய் மோசடியால் தான், தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவே பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி சாதனையாக அமைந்துள்ளது.  விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத தேசம் வாழ முடியாது. இந்திய அரசு வேளாண்மையை கைவிட்டுவிட்டு, தொழில் வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருப்பது பேராபத்தில் முடியும்.  தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கும் திமுகவினர், திமுக ஆட்சியின்போது எத்தனை திட்டங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். 
 நெகிழி ஒழிப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெற்றாலும், நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT