திண்டுக்கல்

கரோனா: அதிநவீன கருவி வாங்க முழு நிதியையும் வழங்கத் தயாா்: ஜோதிமணி எம்.பி.

DIN

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை விரைவாகக் கண்டறிவதற்கான அதிநவீன கருவி வாங்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் வழங்கத் தயாராக இருப்பதாக கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி தெரிவித்தாா்.

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், முகக் கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.1.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தேன். அடுத்த கட்டமாக ரூ.57 லட்சம் வழங்கியுள்ளேன். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவத்துறையினரைப் போல் காவல் துறையினரின் பணியும் சிறப்பாக உள்ளது. அதனால், வேடசந்தூா் காவல்துறையினருக்குத் தேவையான பாதுகாப்பு உபரகணங்கள் வாங்குவதற்காக ரூ.2.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளேன்.

கரோனா வரைஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவப் பரிசோதனைகளை விரைவாக மேற்கொண்டு, முடிவுகளை துரிதமாக வெளியிட வேண்டும். கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய அதிவிரைவாக பரிசோதனை செய்யும் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. அதேபோன்ற நவீன இயந்திரத்தை தமிழக அரசும் வாங்க வேண்டும். அதற்காக எனது எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து பணிகளையும் ரத்துசெய்து விட்டு முழு நிதியையும் தமிழக அரசுக்கு வழங்க தயாராக உள்ளேன்.

ஊரடங்கு அறிவிப்புக்கு முன் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கரோனா வைரஸ் தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டது என்ற செய்தியை மட்டுமே நாட்டு மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

லட்சுமி மேனன் பிறந்தநாள்!

பொன்மேனி..!

SCROLL FOR NEXT