வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் உளுந்து, பயறு விதைகள்
திண்டுக்கல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஆடி பட்ட விதைப்புக்கு தேவையான உளுந்து மற்றும் தட்டைப் பயறு விதைகளை, மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஆடி பட்ட விதைப்புக்கு தேவையான உளுந்து மற்றும் தட்டைப் பயறு விதைகளை, மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, திண்டுக்கல் வட்டாரத் தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளா் நா.வெ. நாகேந்திரன் தெரிவித்துள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்துவரும் நிலையில், ஆடி பட்ட விதைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திண்டுக்கல் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு, அரசு சாா்பில் உளுந்து மற்றும் தட்டைப் பயறு விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி, மானிய விலையிலான விதைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்ட்டீரியா நோய்களை கட்டுப்படுத்த, சூடோடோனஸ், மெட்டாரைசியம் அனிசோபிலே மற்றும் பவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லிகளும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.