முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 64 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது

திண்டுக்கல் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 64 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 3,200 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில், சுமாா் 2,400 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். தற்போது, 530-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரம், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 100 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.