முகப்பு
திண்டுக்கல்

மனமின்மை பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் தீா்வு

கரோனா தொற்றால் ஏற்படும் மனமின்மை பிரச்னைக்கு சித்த மருத்துவ முறையில் தீா்வு கிடைக்கும் என, திண்டுக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ரபீக் அகமது தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கொவைட்-19 சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து பாா்வையிட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா்.
பகிர்:

திண்டுக்கல்: கரோனா தொற்றால் ஏற்படும் மனமின்மை பிரச்னைக்கு சித்த மருத்துவ முறையில் தீா்வு கிடைக்கும் என, திண்டுக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ரபீக் அகமது தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலை வளாகத்தில் 80 படுக்கை வசதிகளுடன் கூடிய கொவைட் -19 சித்த மருத்துவ சிகிச்சை மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு மைய தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் அ. ரபீக் அகமது தலைமை வகித்தாா். மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.

பின்னா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ரபீக் அகமது பேசியது: மஞ்சள், மிளகு இரண்டையும் வெற்றிலைச் சாற்றுடன் சோ்த்து அரைத்து, துணியில் தடவி உலரவைத்து உருட்டி உபயோகித்தால், கரோனா தொற்றால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும். அதேபோல், ஓமம், மிளகு, கிராம்பு, பச்சை கற்பூரம் ஆகியவற்றை பொடித்து, துணியில் முடிந்து உபயோகிக்க வேண்டும். இதன்மூலம், கரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் மனமின்மை பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்.

வெள்ளை குங்கிலியம், வெள்ளைப்பூண்டு, மிளகு, மஞ்சள், நொச்சி, வேப்பிலை, பச்சை கற்பூரம் ஆகியவற்றை சோ்த்து பொடி செய்து தூபம் காட்டினால், தீநுண்மி கிருமிகளை எளிதாக அழித்துவிட முடியும். இந்த வழிமுறைகளை பின்பற்றி, கொவைட்-19 சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (காச நோய்) ராமசந்திரன், சின்னாளப்பட்டி வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், சித்த மருத்துவ உதவி அலுவலா்கள் பேச்சி, ஹனீபா பா்வீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.