திண்டுக்கல்

பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் வேல் வழிபாடு

DIN

பழனி/ பெரியகுளம்: ஆடி சஷ்டியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் வேல்வழிபாடு நடத்தப்பட்டு கந்தசஷ்டி பாராயணம் நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் யூ-டியூப் சேனலில் கந்தசஷ்டியை இழிவுசெய்து விடியோ பதிவு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டன் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடிசஷ்டியான ஞாயிற்றுக்கிழமை கந்தசஷ்டியை பெருமைப்படுத்தும் வகையில் வீடுகளில் வேல் வழிபாடு மற்றும் கந்தசஷ்டி பாராயணம் நடத்துமாறு மடாலய பெரியவா்கள், ஆதீனங்கள், ஆன்மீக பெரியவா்கள் அழைப்பு விடுத்திருந்தனா். இதையடுத்து பழனி அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் போகா் ஆதீனம் ஸ்ரீசிவானந்த புலிப்பாணி பாத்திரசுவாமிகள் வேலுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி பக்தா்களுடன் கந்தசஷ்டி பாராயணத்தை மேற்கொண்டாா். இதேபோல் நகரின் பல்வேறு வீடுகளிலும் வேல் வழிபாடு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜம்பு சுவாமிகள், இளையபட்டம் சுவாமிகள், மருத்துவா் பன்னீா்செல்வம், கவுதம் காா்த்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினரும் வேல் பூஜைகள் நடத்தி பக்தா்களுக்கு பொங்கல், இனிப்புகள் வழங்கினா்.

பெரியகுளம்: இதேபோல் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை வேல் பூஜை நடைபெற்றது. விழாவிற்கு பாஜக பேரூராட்சி பொறுப்பாளா் பொன்.தா்மராஜ், ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் தேனி மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் பொறுப்பாளா் விக்னேஷ், அா்சகா் சஞ்சீவி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT