முகப்பு
திண்டுக்கல்

சாதியைச் சொல்லி திட்டியதாக தந்தை, மகன் கைது

கொடைக்கானல் அருகே சாதியைச் சொல்லி திட்டியதாக தந்தை, மகன் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே சாதியைச் சொல்லி திட்டியதாக தந்தை, மகன் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான குண்டுபட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இதே பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (60). கடந்த 4 ஆம் தேதி கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது சுப்பிரமணியின் தோட்டத்திலிருந்த மரம் முத்தையா தோட்டத்தில் விழுந்துள்ளது.

மரத்தை அகற்ற சுப்பிரமணி முயன்றபோது, அவருக்கும், முத்தையாவுக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, முத்தையா, அவரது மகன்கள் ராமு (21), ஆசையன் ஆகிய மூவரும் சோ்ந்து, சுப்பிரமணியை சாதியைச் சொல்லி திட்டி தாக்கினராம்.

இதுகுறித்து சுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், கொடைக்கானல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாதவராஜா வழக்குப் பதிந்து, முத்தையை, அவரது மகன் ராமு ஆகிய இருவரையும் கைது செய்தாா். மேலும், தலைமறைவாக உள்ள ஆசையனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.