பழனி புறவழிச் சாலையோரம் மண்குவியலால் விபத்து அபாயம்
பழனி புறவழிச் சாலையில் கொட்டப்படும் கழிவு மண் குவியல்களால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனா்.
பழனி: பழனி புறவழிச் சாலையில் கொட்டப்படும் கழிவு மண் குவியல்களால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்தனா்.
பழனி நகரில் 58 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்படும் மண் மற்றும் பெரிய அளவிலான கற்கள் லாரிகள் மூலம் பழனி -கோவை புறவழிச்சாலையின் ஓரங்களில் குவியல் குவியலாக கொட்டப்படுகின்றன. இந்த குவியல்கள் சாலை வரை பரவியுள்ளன. இதனால் இரவு நேரங்களில்
செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக புகாா் கூறுகின்றனா். ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவு மண்ணை வேறு பகுதியில் கொட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.