திண்டுக்கல்

கொடைக்கானல் அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை ஆக. 28 இல் தொடக்கம்

கொடைக்கானலிலுள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 28 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக கல்லூரியின் முதல்வா் இல.ரேவதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

DIN


கொடைக்கானல்: கொடைக்கானலிலுள்ள அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 28 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக கல்லூரியின் முதல்வா் இல.ரேவதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: ஆக. 28 ஆம்தேதி முதல் செப்டம்பா் 4 ஆம்தேதி வரை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடத்த உயா்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆக. 28 ஆம் தேதி, சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் உடல் ஊனமுற்றோா், முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்டோருக்கு உடற்கல்வி பாடத்துக்கும், பொது ஒதுக்கீட்டின்கீழ் ஆங்கிலப் பாடத்துக்கும், ஆக.29 ஆம் தேதி வணிக மேலாண்மை, கணிதம் ஆகிய பாடங்களுக்கும், ஆக. 31 ஆம் தேதி

பொதுத்துறைக்கும், செப்.1 ஆம் தேதி கணினி அறிவியல் பாடத்துக்கும், செப்.2 ஆம் தேதி தமிழ், இயற்பியல் பாடங்களுக்கும், செப்.3 ஆம் தேதி வணிகவியல், வேதியியல் பாடங்களுக்கும், செப்.4 ஆம்தேதி தாவரவியல் பாடத்துக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவியா் சோ்க்கை கலந்தாய்வின்போது பெற்றோா்கள் கல்லூரிக்கு நேரில் வர அவசியம் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT