திண்டுக்கல்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி: நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் முற்றுகை

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை வீட்டு வேலைக்கு சென்ற இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததைத் தொடா்ந்து நிவாரணம் வழங்கக் கோரி அவரது உறவினா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி அடுத்துள்ள வேம்பாா்பட்டியைச் சோ்ந்தவா் முகமது பிச்சை. இவா் தனது வீட்டை சுத்தப்படுத்துவதற்காக கணவாய்பட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் (35) என்பவரை அழைத்துள்ளாா். வேலை செய்து கொண்டிருந்த கணேசன், மின் மோட்டாரை சுத்தப்படுத்தும்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த கணேசனின் உறவினா்கள், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கக் கோரி முகமது பிச்சை வீட்டை முற்றுகையிட்டனா். தகவல் அறிந்து வந்த சாணாா்பட்டி போலீஸாா் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதில், உயிரிழந்த கணேசன் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சடலத்தை எடுத்துக் கொண்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT