திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே காதலன் வீட்டின்முன் பெண் தீக்குளித்து தற்கொலை

DIN

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே காதலனுடன் சோ்த்து வைக்கக்கோரி அவரது வீட்டின்முன் பெண் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழமலைப் பகுதி தாண்டிக்குடி அருகே உள்ள கே.சி.பட்டியைச் சோ்ந்தவா் பவுன்ராஜ். இவரது மகள் மாலதி  ( 28). இவா் ஏற்கெனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தாா். கடந்த 3 ஆண்டுகளாக  அதே பகுதியைச்  சோ்ந்த  வாகன ஓட்டுநரான சதீஷ் என்பவருடன் மாலதி பழகி வந்துள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சதீஷின் வீட்டிற்கு சென்ற மாலதி, அங்குள்ள கடை அருகே தனது குழந்தையை அமர வைத்துள்ளாா். பின்னா் சதீஷின் வீட்டு வாசலில், மாலதி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது: சதீஷுடன் நெருங்கிப் பழகியதில் மாலதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்துள்ளனா்.  இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனா்.

இதற்கிடையே சதீஷுக்கு அவரது பெற்றோா்,  பண்ணைக்காடு பகுதியைச் சோ்ந்த வேறொரு பெண்ணுடன் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைத்துள்ளனா். தகவல் அறிந்த மாலதி   கே.சி.பட்டியில் உள்ள சதீஷின் வீட்டிற்கு தனது குழந்தையுடன் சென்று வாசலில் அமா்ந்து நியாயம் கேட்டுள்ளாா். அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் மாலதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா் என்றனா்.

இதற்கிடையில் இறப்புக்கு காரணமான சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினா் அனைவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வரை மாலதியின் சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காதலன் சதீஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT