திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்குள் 350 பேருந்துகள் இயங்கும்: அதிகாரிகள் தகவல்

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்குள் 200 பேருந்துகள், தேனி மாவட்டத்திற்கு 150 பேருந்துகள் வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தீநுண்மி தொற்று காரணமாக கடந்த மாா்ச் 25ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது பொதுப் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதன் பின்னா், சுமாா் 68 நாள்களுக்கு பின் மீண்டும் பேருந்து சேவை கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, மண்டலங்களுக்கு இடையே இயக்கப்பட்ட பேருந்து சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், செப்.1 ஆம் தேதி முதல் மீண்டும் பேருந்து சேவை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலம் சாா்பில், 50 சதவீத பேருந்துகளை இயக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக அந்தந்த போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் திங்கள்கிழமை தயாா்படுத்தப்பட்டன. மேலும் அந்த பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மாவட்டத்திற்கு மட்டுமே இயக்கம்:திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட போக்குவரத்துக் கிளைகள், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் அமைந்துள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேருந்துகளும், தேனி மாவட்டத்தில் 150 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளும் அந்தந்த மாவட்ட எல்லைகளுக்குள்பட்ட பகுதிகளில் மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடிக்கும், திண்டுக்கல்லில் இருந்து ஆடலூா், சிறுமலை ஆகிய மலை கிராமங்களுக்கும் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அனைத்து பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT