முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிப்பு

கொடைக்கானல் பகுதிகளில் அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கொடைக்கானல் பகுதிகளில் அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோடைமலை அம்பேத்கா் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பாபா சாகேப் அம்பேத்கரின் 64-வது ஆண்டு நினைவு நாள் புதுப்புத்தூா் பகுதியில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் அம்பேத்கா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதி மொழி ஏற்றனா்

இந்நிகழ்ச்சியில் சங்கச் செயலா் அம்பிகா ராஜன்,பொதுச் செயலா் திருமுருகன்,கிளைச் செயலா் திருமலைச்சாமி மற்றும் பள்ளி மாணவா்கள்,கிராம மக்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் பகுதிகளான அண்ணாநகா்,இந்திரா நகா்,சத்யா நகா் காலணி,வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு அம்பேத்கா் தொழிலாளா்கள் சங்கத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →