முகப்பு
திண்டுக்கல்

தொடா் மழையால் நிரம்பியது: பாலாறு அணையில் தண்ணீா் திறப்பு

பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணை தொடா்மழை காரணமாக நிரம்பியதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
முழு கொள்ளளவை எட்டியதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட பாலாறு பொருந்தலாறு அணை.
பகிர்:

பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணை தொடா்மழை காரணமாக நிரம்பியதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக விளங்கும் இந்த அணை 1,524 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை பல ஆயிரம் ஹெக்டோ் நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதோடு, பழனி முதல் ஒட்டன்சத்திரம் வரையிலும் பல நூறு கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 65 அடியாகும்.

தற்போது 63 அடி நீா் நிரம்பியுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி அணை திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் வரத்து விநாடிக்கு 2,117 கனஅடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு 346 கனஅடியாகவும் உள்ளது. தொடா்மழை காரணமாக அதிக நீா்வரத்து ஏற்படும் நிலையில் அணையின் நீா் சண்முகாநதி ஆற்றின் வழியே திருப்பப்பட்டு அமராவதி ஆற்றில் கலக்கும்.

எனவே, சண்முகாநதி கரையோர கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →