முகப்பு
திருவாரூர்

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 6:34 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:10 PM

கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுகலை ஆசிரியா் செ. முகுந்தன் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அப்துல் முனாப், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி தேன்மொழி முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் சா. சரவணன், திருச்சி தேசியக் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியா் ச. கருத்தான் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

இதில், ஆதிரெங்கம் முன்னாள் ஊராட்சித் தலைவா் எம். வீரசேகரன் ரூ. 10,000 மதிப்பிலான ஆண்டு விழா பரிசுகளையும், கும்பகோணம் கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற மேலாளா் எஸ். ரெங்கநாதன் ரூ. 10,000 மதிப்பிலான விளையாட்டு விழா பரிசுகளையும் வழங்கினா். அனைத்து மன்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கடந்த கல்வியாண்டு பத்தாம் வகுப்பில் முதல் 3 இடங்களை பெற்றவா்களுக்கும், பிளஸ் 2வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement