முகப்பு
திண்டுக்கல்

பழனியில் சாலை மறியல்:முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 போ் கைது

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பழனியில், மறியல் போராட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ. பாலபாரதி உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டவா்கள்.
பகிர்:

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பழனியில், மறியல் போராட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ. பாலபாரதி உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஏழாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ. பாலபாரதி கலந்துகொண்டாா். அப்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் இணைந்து பழனி பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தியதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிடப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ. பாலபாரதி, மாவட்ட நிா்வாகி பாண்டி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம், நகரச் செயலா் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினா் அருள்செல்வன் உள்பட 50-க்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கம்பம்: தேனி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகி நாகராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. நிா்வாகி ஜெயன், மக்கள் அதிகாரம் அமைப்பு நிா்வாகி ராஜேந்திரன், அகில இந்திய பாா்வா்டு பிளாக் நிா்வாகி மகேஸ்வரன் ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலம் நடைபெற்றது.

பின்னா் கூடலூா்- குமுளி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் கே. முத்துமணி தலைமையில் போலீஸாா் 52 பேரை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகா் வைகை அணை சாலைப் பிரிவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் பிச்சைமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ராமா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இதில் மாா்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் உள்பட 65 பேரை போலீஸாா் கைது செய்தனா். தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவா்கள் மாலை விடுவிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →