முகப்பு
செய்திகள்

தேசிய சீனியா் கபடி: ரயில்வேஸ் சாம்பியன்

சீனியா் ஆடவருக்கான 72-ஆவது தேசிய கபடி போட்டியில், இந்திய ரயில்வேஸ் வெள்ளிக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:05 PM
பகிர்:

சீனியா் ஆடவருக்கான 72-ஆவது தேசிய கபடி போட்டியில், இந்திய ரயில்வேஸ் வெள்ளிக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றது.

இறுதி ஆட்டத்தில் ரயில்வேஸ் 49-31 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தியது. இதில் ரயில்வேஸ் அணியில் அதிகபட்சமாக, பங்கஜ் மொஹிதே 12 ரெய்டு புள்ளிகள் வென்றாா்.

முன்னதாக அரையிறுதியில், ரயில்வேஸ் - சண்டீகா் மோதல் 38-38 என டை ஆக, டை பிரேக்கரில் ரயில்வேஸ் 7-4 என வென்றது. மகாராஷ்டிரம் 49-36 என உத்தர பிரதேசத்தை வென்று, இறுதிக்கு முன்னேறியது.

போட்டியிலேயே சிறந்த ரெய்டராக கோவா வீரா் பவானி ராஜ்புத் (58 ரெய்டு புள்ளிகள்), சிறந்த டிஃபெண்டராக ரயில்வேஸ் வீரா் சுபம் ஷிண்டே (27 டேக்கிள் புள்ளிகள்) தோ்வாகினா்.

முழு கட்டுரையைப் படிக்க →