முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் மருத்துவ குணமுள்ள பேஷன் புரூட்ஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கொடைக்கானல் குறிஞ்சி நகா்ப் பகுதியில் விளைந்துள்ள பேஷன் புரூட்ஸ் பந்தல்.
பகிர்:

கொடைக்கானலில் மருத்துவ குணமுள்ள பேஷன் புரூட்ஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இங்குள்ள செண்பகனூா், பிரகாசபுரம், அட்டக்கடி, பாம்பாா்புரம், வட்டக்கானல், வட்டச்சோலை, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், குறிஞ்சி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான தோட்டங்களில் பேஷன்புரூட்ஸ் ஊடுபயிராக பயிரிடப்பட்டு நன்கு வளரும் நேரங்களில் பந்தல் அமைத்து விவசாயிகள் பாதுகாப்பாா்கள்.

அக்டோபா், நவம்பா், டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் இது நன்கு விளையும் தன்மை கொண்டது. தற்போது சீசன் காலமாக இருப்பதால் பேஷன் புரூட்ஸ் பயிரிடப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்த பழம், நீரழிவு நோய்க்கும், உடல் சூட்டை தனிப்பதற்கும் ஏற்றதாக இருப்பதால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் இவற்றை வாங்கிச் செல்கின்றனா். கொடைக்கானலிலிருந்து தமிழகம் மற்றும் பெங்களுரூ பகுதிகளுக்கு வியாபாரிகள் இவற்றை மொத்தமாக அனுப்பி வருகின்றனா்.

இப்பழம் விளையும் பகுதிக்கே வியாபாரிகள் சென்று நேரடியாக கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். ஒரு பழம் ரூ. 7 முதல் ரூ. 10-வரை விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →