முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயிலில் சிறந்த பணியாளா்களுக்கு பாராட்டு

பழனி கோயிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித குற்றச்சாட்டுமின்றி பணியாற்றியவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

பழனி கோயிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித குற்றச்சாட்டுமின்றி பணியாற்றியவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுச் சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 700-க்கும் மேற்பட்ட பணியாளா்கள், தலைமை அலுவலகம், கோயில் சாா்பு நிறுவனங்கள், மலைக் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றி வருகின்றனா்.

பணியாளா்கள் சாா்பில், எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் சிறப்பாக பணியாற்றும் பணியாளா்கள் சிறப்பிக்கப்பட வேண்டுமென நீண்ட காலமாக இந்து சமய அறநிலையத் துறையிடம் கோயில் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்து வந்தனா். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அவா்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை கோயில் தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித குற்றச்சாட்டுமின்றி சிறப்பாக பணிபுரிந்து வரும் கண்காணிப்பாளா்கள், துணை மேலாளா்கள், ஆசிரியா்கள், ஓதுவாா்கள், வரைபட வல்லுநா், மின் இழுவை ரயில் ஊழியா்கள், அலுவலகப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் 5 ஓய்வுபெற்ற ஊழியா்கள் உள்பட மொத்தம் 30 பணியாளா்களுக்கு, கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான கிராந்திகுமாா் பாடி தலைமையில், பாராட்டுச் சான்றிதழ்களும், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், முதுநிலை கணக்கியல் அலுவலா் மாணிக்கவேல், செயற்பொறியாளா்கள் வெங்கடேசன், நாச்சிமுத்து, மேலாளா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →