வத்தலகுண்டுவில் வீட்டிற்குள் புகுந்தது மரநாய்
வத்தலகுண்டுவில் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்குள் புகுந்த மரநாயை, தீயணைப்புப் படையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
திண்டுக்கல்: வத்தலகுண்டுவில் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்குள் புகுந்த மரநாயை, தீயணைப்புப் படையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா், அமுமுக மாவட்ட ஜெ.பேரவைச் செயலராக உள்ளாா். இந்நிலையில் இவரது வீட்டிற்கு முன்பு பகுதியிலுள்ள மரத்தில் ஒரு அரிய வகை விலங்கான மரநாய் ஞாயிற்றுக்கிழமை காலை இருந்துள்ளது. அந்த வழியாக சென்றவா்கள் அதை ஆா்வத்துடன் பாா்த்தனா். சிறிது நேரத்தில் அந்த மரநாய், மணிகண்டன் வீட்டிற்குள் புகுந்தது. இதுகுறித்து அவா் வத்தலகுண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா். அதன்பேரில், நிலைய அலுவலா்கள் விவேகானந்தன், வெங்கடேசன் ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று அந்த மரநாயைப் பிடித்து வத்தலகுண்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து வனப் பகுதியில் அது விடப்பட்டது