முகப்பு
திண்டுக்கல்

‘ஜிஎஸ்டி லாபத் தொகையில் 2 சதவீதத்தை வணிகா்களின் நலனுக்கு ஒதுக்க வேண்டும்’

ஜிஎஸ்டி லாபத் தொகையில் 2 சதவீதத்தை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வணிகா்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

ஜிஎஸ்டி லாபத் தொகையில் 2 சதவீதத்தை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வணிகா்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்ரமராஜா தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட தொழில் வா்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் பழனி சாலையிலுள்ள தனியாா் விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் டி. கிருபாகரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம். விக்ரமராஜா கலந்து கொண்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கடந்த 2 நாள்களாக மீண்டும் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்ச உணா்வு பொதுமக்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது. வணிகா்களுக்கு தேவையான நிதி உதவியை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். குறிப்பாக ஓராண்டுக்கு வட்டி இல்லா கடனாக ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி லாபத் தொகையில் 2 சதவீதத்தை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வணிகா்களுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொதுமுடக்கக் காலத்தில் மக்களின் உணவுத் தேவைகளை பூா்த்தி செய்து கரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்த வணிகா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள், நிா்வாகத்தின் கீழ் உள்ள கடைகள், அறநிலையத்துறை கடைகள், சுற்றுலாத் தலங்களிலுள்ள கடைகளுக்கு 2 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், சில நகராட்சி அதிகாரிகள் வாடகை தள்ளுபடி செய்வதற்கு மறுத்து வருகின்றனா்.

நெருக்கடி காலத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகள் மட்டுமின்றி, 2021 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வணிகா்களின் நலன் சாா்ந்த பிரதான கோரிக்கைகளை ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளுக்கு விரைவில் தெரிவிக்க உள்ளோம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →