திண்டுக்கல்

கொடைக்கானலில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

DIN

நகராட்சி சுகாதார ஆய்வாளா் தரக்குறைவாக நடத்தியதாகக் கூறி கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

கொடைக்கானல் நகராட்சி சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பையா. இவருக்கு தூய்மைப் பணியாளரான ஜான் என்பவா் தேநீா் வாங்கிக் கொடுத்துள்ளாா். அது சூடாக இல்லை என்று கூறிய அவா், தேநீரை ஜான் மீது ஊற்றி தகாத வாா்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் தங்களது பணிகளைப் புறக்கணித்து மூஞ்சிக்கல் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அதனைத் தொடா்ந்து சிறுவா் பூங்கா காந்தி சிலைக்கு முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா். அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதற்கு உடன்பட மறுத்த அவா்கள், அங்கிருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் அதிமுக முன்னாள் நகா் மன்றத் தலைவா் ஸ்ரீதா், நகராட்சி ஆணையாளா் நாராயணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் சுகாதார ஆய்வாளா் சுப்பையா தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்ததைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT