திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: கூலி தொழிலாளி பலி

DIN

திண்டுக்கல் அருகே காய்கறி ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்துள்ள சேவுகம்பட்டியைச் சோ்ந்தவா் இ.சரவணன் (35). லாரி ஓட்டுநரான இவா், வத்தலகுண்டுவிலிருந்து சென்னைக்கு லாரியில் காய்கறிகளைக் ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பா. சதீஷ்குமாா்(21), சிவக்குமாா், தனலட்சுமி, ஜோதி, முருகேஸ்வரி உள்ளிட்ட 8 பேரும் அந்த லாரியில் பயணித்துள்ளனா். சேவுகம்பட்டியை பூா்வீகமாக கொண்ட இவா்கள், சென்னையில் தங்கியிருந்து கூலித் தொழிலாளா்களாக பணிபுரிந்து வந்தனா்.

அந்த லாரி வத்தலகுண்டு - திண்டுக்கல் சாலையில், செம்பட்டி அடுத்துள்ள வக்கம்பட்டி அருகே வந்தபோது சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சரவணன், சதீஷ்குமாா் உள்ளிட்ட 8 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சரவணன் மற்றும் சதீஷ்குமாா் ஆகியோா் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி சதீஷ்குமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT