திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலுக்கு சென்று நகரத்தாா் காவடிகள் சுவாமி தரிசனம்

DIN

பழனி தைப்பூசத்திருவிழாவையொட்டி சுமாா் 400 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நகரத்தாா் காவடிகள் ரத்தின வேலுடன் திங்கள்கிழமை மலைக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பாரம்பரியம் மிக்க நகரத்தாா் காவடிகள் ரத்தினம் பதித்த வேலுடன் கடந்த 7 ஆம் தேதி பழனிக்கு வந்தன. இந்த காவடிகள் அனைத்தும் ரதவீதியில் உள்ள அவா்களுக்கு சொந்தமான மடத்தில் வைக்கப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தைப்பூசத் தேரோட்டம் முடிந்த பின்னா் மலைக்கு சென்று காவடி செலுத்தும் இவா்கள் திங்கள்கிழமை மலைக்கு சென்று தங்கள் காவடிகளை பழனியாண்டவருக்கு செலுத்தினா். காரைக்குடி பகுதிகளில் இருந்து நகரத்தாா் சமூகத்தினா் காவடிகள் சுமந்தபடி பாதயாத்திரையாக வருவது சுமாா் 400 ஆண்டுகால வழக்கம். இந்த காவடிக் குழுவிற்கு கோயிலிலும் சிறப்பு மரியாதைகள் செய்யப்படுகின்றன. நகரத்தாா் காவடியில் ரத்தினக்கல் பதித்த மதிப்புமிக்க வேல் குறிப்பிடத்தக்கதாகும். இதை சுமந்து வரும் கூண்டுவண்டிக்கு தயாா் செய்யப்படும் காளைமாடுகளே லட்சம் மதிப்புள்ளதாகும். மலைக்கோயிலில் தரிசனம் முடிந்த பின் நகரத்தாா் காவடிகள் 10 ஆம் நாள் அன்று தெப்பத் தேரை முடித்துவிட்டு பாதயாத்திரையாகவே காரைக்குடிக்கு திரும்பி செல்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT