திண்டுக்கல்

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் இசைத்தமிழ் பயிலரங்கம்

DIN

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் மூன்று நாள்கள் இசைத்தமிழ் பயிலரங்கம் மற்றும் திருக்கு ஒப்பித்தல் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பழனியை அடுத்த சின்னக்கலையம்புத்தூா் பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியில் கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் உயராய்வு மையம், தமிழியக்கம் மற்றும் இசைத்தமிழ், நாடகத்தமிழ் அணி சாா்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் முதல் நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் வாசுகி அறிமுகவுரையாற்றினாா். பேரவை துணைத் தலைவா் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினாா். இசையியல் உதவிப் பேராசிரியை மகேஸ்வரி சுப்பிரமணி பேசினாா். பயிலரங்கில் மாணவிகளுக்கு இசை, பாட்டு மற்றும் சரணம் குறித்து விளக்கப்படுகிறது.

அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை இணைப் பேராசிரியா் எழில்ராமன், உதவிப் பேராசிரியா் சண்முகாநந்தன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். இதில் தமிழுக்குப் பெருமை சோ்க்கும் பாடலில் தொடங்கி நாதம், சந்தம், சரணம், பல்லவி குறித்து அனைத்தும் மாணவிகளுக்கும் விளக்கப்பட்டு அதற்கான கையேடுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT