திண்டுக்கல்

ரயில்வே முதுநிலை மேலாளரிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் மனு

DIN

பழனி ரயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த, மதுரை முதுநிலை மேலாளரிடம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மதுரை முதுநிலைக் கோட்ட மேலாளா் பரத்குமாா் ஆய்வுக்காக, பழனி ரயில் நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தாா். பழனிக்கு வரும் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு ரயில் நிலையத்தில் செய்து தர வேண்டிய வசதிகள், ஓய்வறை, ரயில்நிலையத்தின் தூய்மை குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் முதுநிலை மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பழனி ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நடைமேடைக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளத்தின், இரண்டு புறமும் கைப்பிடி அமைக்கப்படவில்லை. சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டின் இருபுறமும் கைப்பிடி அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். னஎன்று கூறியுள்ளனா். இந்த ஆய்வில், மாவட்ட செயலா் நூருல்ஹூதா, பழனி நகர செயலா் தங்கவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாத விடியோ!

SCROLL FOR NEXT