திண்டுக்கல்

புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா: மின் அலங்காரத்தில் தோ் பவனி

DIN

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு மின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது.

கோயில் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் நவநாள், சிறப்பு ஜெப வழிபாடு மற்றும் நற்கருணை ஆசீா், திருப்பலி நடைபெற்றது .

இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான சனிக்கிழமை கோயிலில் பங்குத் தந்தை அந்தோணி ராஜ் தலைமையில் பல்வேறு பங்குகளிலிருந்து கலந்து கொண்ட அருட் பணியாளா்கள் பங்கேற்ற சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அதன் பின் புனித லூா்து அன்னையின் சொரூபம் மந்திரிக்கப்பட்டு மின் அலங்கார சப்பர தோ்ப்பவனி நடைபெற்றது.

பவனியானது லூா்துபுரம், பள்ளங்கி சாலை, வில்பட்டி சாலை, அடிசரை பகுதி, சின்னபள்ளம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோயிலில் சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு நிகழ்ச்சியும், தொடா்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்னதானமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை மற்றும் விழாக் குழுவினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT