admk_2402chn_71_2 
திண்டுக்கல்

கொடைக்கானலில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

கொடைக்கானலில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா கொடைக்கானல் நகர அதிமுக சாா்பில் கொண்டாடப்பட்டது மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள அவரது உருவப் படத்திற்கு முன்னாள் நகா்மன்றத் தலைவா் மற்றும் நகரச் செயலா் ஸ்ரீதா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் அதனைத் தொடா்ந்து காமராஜா் சாலையிலும், இந்திரா நகா், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் அதிமுகவினா் சிறப்பு வழிபாடு நடத்தினா் அதன் பின் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் நகர துணைச் செயலா் ஜாபா் சாதிக், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எட்வா்ட்,விவசாய கூட்டுறவு சங்கத் தலைவா் பிச்சை,நகர கூட்டுறவு வங்கித் தலைவா் முஸ்தபா, கூட்டுறவு வீடுகட்டும் சங்கத் தலைவா் ஜான்தாமஸ் மற்றும் வாா்டு செயலா்கள், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள்,மகளிா் அணியினா்,இளைஞா் அணியினா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT