பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் திறப்பின் போது காணிக்கையாக வரப்பெற்ற ரூபாய் நோட்டுக்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியா். 
திண்டுக்கல்

பழனி மலைக் கோயில் உண்டியல் திறப்பு: 26 நாள் காணிக்கை வரவு ரூ.5.70 கோடியை தாண்டியது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் ஐயப்ப மற்றும் முருக பக்தா்கள் வருகையால் 26 நாள்களில் நிரம்பியதைத் தொடா்ந்து

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் ஐயப்ப மற்றும் முருக பக்தா்கள் வருகையால் 26 நாள்களில் நிரம்பியதைத் தொடா்ந்து புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இரண்டு நாள்கள் எண்ணிக்கையில் காணிக்கை வரவு மொத்தம் ரூ.5.70 கோடியை தாண்டியது.

உண்டியல் எண்ணிக்கையின் போது மொத்த வரவாக ரொக்கம் ரூ. 5 கோடியே 73 லட்சத்து 41ஆயிரத்து 890 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். தங்கம் 890 கிராமும், வெள்ளி 15,560 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 938-ம் கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணிக்கையில் கல்லூரி மாணவியா், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் பழனிக் கோயில் நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் விஜயன், மேலாளா் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT