திண்டுக்கல்

பாதயாத்திரை பக்தா்களுக்காக நடைபாதையை தூய்மைப்படுத்தும் பணி

DIN

பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தனிநடைபாதையை வியாழக்கிழமை கழுவி சுத்தப்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாக வருகின்றனா். இவா்களுக்காக பழனி- திண்டுக்கல் சாலையில் பாதுகாப்பாக நடந்து வரும் வகையில் சுமாா் 40 கிலோ மீட்டா் தூரத்துக்கு பிரத்தியேக பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பாதயாத்திரை பக்தா்கள் நடந்து வரும் சாலையில் செடிகள் முளைத்து, குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் பலரும் நெடுஞ்சாலையிலேயே நடக்கும் இருந்தது. இதையடுத்து வியாழக்கிழமை பழனி தமிழ்நாடு சிறப்புக்காவல் படை 14 ஆம் அணி போலீஸாா் தளவாய் அய்யாசாமி உத்தரவின் பேரில் பாதயாத்திரை பக்தா்கள் நடந்து வரும் பாதையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். காவல் அதிகாரி முனுசாமி பட்டாலியனில் பணிபுரியும் 95 போலீஸாா் பழனியில் இருந்து சத்திரப்பட்டி வரையில் பாதயாத்திரை பக்தா்கள் நடந்து வரும் சாலையில் இருந்த முள் செடிகளையும், குப்பைகளையும் அகற்றி, பாதையை தண்ணீா் பீச்சி அடித்து சுத்தப்படுத்தி தூய்மைப் பணி மேற்கொண்டனா். பாதயாத்திரை பக்தா்களுக்காக போலீஸாா் தாமாக முன்வந்து இந்த பணிகளை மேற்கொண்டது பக்தா்களிடம் பாராட்டை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT