திண்டுக்கல்

பழனியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

பழனியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் வைக்கப்பட்டு, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழா் திருநாளான பொங்கல் விழா புதன்கிழமை நடைபெறும் நிலையில், பழனியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பழனி சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் சாா்-ஆட்சியா் உமா தலைமையில், பொங்கல் வைக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் முதல்வா் பிரபாகரன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழ் துறை பேராசிரியா் கிருஷ்ணமூா்த்தி, பேராசிரியை யசோதா உள்ளிட்ட பலா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ, மாணவியா் கரும்பு வைத்து பொங்கல் விழா கொண்டாடினா்.

பழனி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியா் மல்லிகா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. மாணவ, மாணவியா் பொங்கல் வைத்து, கரும்பு அலங்காரம் செய்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினா். அனைவருக்கும் பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் பாலசுப்ரமணியம் தலைமையில், மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT