திண்டுக்கல்

ஒரு வார பொதுமுடக்கம் முடிவுபழனியில் இன்று கடைகள் திறப்பு

DIN

பழனியில் ஒருவார முழு பொதுமுடக்கம் முடிந்து வெள்ளிக்கிழமை கடைகள் திறக்கப்படுகின்றன.

பழனியில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வியாழக்கிழமை வரை அனைத்து வணிகா் சங்கங்களும் தாமாக முன்வந்து கடைகளை அடைத்து ஆதரவு தெரிவிப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனா். இதையடுத்து மருந்து மற்றும் பால் கடைகளை தவிரித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இந்நிைலையில், பொதுமுடக்கம் முடிந்து வெள்ளிக்கிழமை அனைத்து கடைகளும் திறக்கப்படவுள்ளன.

பழனியில் மாலை ஐந்து மணிக்கே போலீஸாா் கடைகளை அடைக்குமாறு கூறியதும், அடைத்த கடைகளின் உரிமையாளா்கள் மீதும் வழக்கு பதிவு செய்வதும் நடந்த நிலையில் இனி வரும் நாள்களிலாவது கடைகளை நடத்த போலீஸாா் வழிசெய்ய வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT