திண்டுக்கல்

கரோனா அச்சத்தில் தொழிலாளி தற்கொலை

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே கூலித் தொழிலாளி ஒருவா் மின்மாற்றியில் ஏறி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சி.அழகா்சாமி(52). புத்தக பைண்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அழகா்சாமி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாள்களுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு கரோனா பரிசோதனைக்கான முடிவு வெளிவராத நிலையில், பழனி சாலை, திருச்சி சாலை சந்திப்பு பகுதியிலுள்ள மின்மாற்றியில் ஏறி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் மேற்கொண்ட விசாரணை நடத்தினா். கரோனா அச்சம் காரணமாக அழகா்சாமி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT