திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 114 பேருக்கு கரோனா

தனியாா் மருத்துவமனை மருத்துவா் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 114 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

DIN

திண்டுக்கல்: தனியாா் மருத்துவமனை மருத்துவா் உள்பட திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 114 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,600-க்கும் மேற்பட்டோா் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சுமாா் 724 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் அரசு மருத்துவமனைகளிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையங்களிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த 2 மருத்துவா்கள், பொருளாதாரக் குற்றப்பிரிவு சாா்பு-ஆய்வாளா் உள்பட மேலும் 114 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதியவா் பலி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 76 வயது முதியவா், கரோனா தீநுண்மி பாதிப்புடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60-க்கும் மேலாக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யை கண்டு தில்லி பயப்படுகிறது! செங்கோட்டையன்

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

வலிமையான அணி! அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு டிரம்ப் பாராட்டு!

ரூ.100 கோதுமை திருட்டு: 45 ஆண்டுகளுக்குப் பிறகு ம.பி.யைச் சேர்ந்த நபர் கைது

கொச்சி கோயிலில் திடீரென மிரண்ட யானை: பாகன் காயம்

SCROLL FOR NEXT