தமிழர் தேசம் கட்சிக்கு 1 தொகுதி! உதயசூரியன் சின்னத்தில் போட்டி!
திமுக கூட்டணியில் தமிழர் தேசம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழர் தேசம் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதன்மையாக, திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் தலைமையில் 4 முனைப் போட்டி நடைபெறவுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் இணைந்த தமிழர் தேசம் கட்சிக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கே.கே. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழர் தேசம் கட்சி மற்றும் திமுக இடையே தொகுதி உடன்பாட்டுக்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை (மார்ச் 26) கையெழுத்தாகியுள்ள நிலையில், அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
மேலும், தமிழர் தேசம் கட்சி போட்டியிடும் தொகுதி குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Tamil Desam Party, which is part of the DMK alliance, has been allocated one seat to contest in the upcoming assembly elections.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.