FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்குமா? உதயநிதி பதில்

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்வது குறித்து மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் கூறியது பற்றி...

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 12:18 pm IST
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - TN DIPR
பகிர்:

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக கலந்துகொள்வது குறித்து மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்றுவதற்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் அல்லது வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்யவிருப்பதாக தில்லியில் இருந்து தகவல் வந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை குறித்து நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசியதாவது, "தொகுதி மறுவரையறை குறித்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பேசியது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான். கடந்தாண்டில் தென்னிந்தியாவில் உள்ள 5 மாநில முதல்வர்களை சென்னைக்கு வரவழைத்து, ஒரு மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதன்முதலாகக் குரல் கொடுத்தவர் மு.க. ஸ்டாலின்.

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நீங்கள் கூட்டும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்து முடிவு செய்வார்" என்று தெரிவித்தார்.

summary

Will the DMK support the delimitation bill? LoP Udhayanidhi responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments