திண்டுக்கல்

‘அவசரச் சட்டங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை’

நாடாளுமன்றம் நடைபெறாத நிலையில், பல்வேறு திட்டங்களை அவசரச் சட்டங்கள் மூலமாக கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என சிவகங்கைத் தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

DIN

திண்டுக்கல்/ பழனி: நாடாளுமன்றம் நடைபெறாத நிலையில், பல்வேறு திட்டங்களை அவசரச் சட்டங்கள் மூலமாக கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என சிவகங்கைத் தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லில் அவா், செய்தியாளா்களிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது:

நாட்டில் ஏற்கெனவே பல்வேறு கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. தற்போதுள்ள சூழ்நிலையில் புதிதாக கோயில்களோ, தேவாலயங்களோ, மசூதிகளோ கட்டுவது தேவையற்றது. அதற்கு பதிலாக மருத்துவமனைகள், கல்லூரி மற்றும் பள்ளிகள் கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சிக்கு இன்னும் 6 மாதங்களில் தீா்வு கிடைக்கும். அதன் பின்னா் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிப் பெற்று திமுக தலைவா் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்பாா். சசிகலா விடுதலையாகி வந்தவுடன், அதிமுகவில் அமமுக ஒன்றிணைந்துவிடும்.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா 2020 மூலம், இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. நாடாளுமன்றம் நடைபெறாத நேரத்தில் பல்வேறு திட்டங்களை அவசரச் சட்டங்கள் மூலமாக மத்திய அரசு கொண்டு வர முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றாா். பின்னா் அவா் அங்கிருந்து பழனிக்கு சென்றாா்.

பழனிக்கோயில் அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னா் அவா் கோவைக்கு புறப்பட்டுச் சென்றாா். முன்னதாக, பழனிக்கு வந்த மக்களவை உறுப்பினரை, மாவட்டச் செயலா், வழக்குரைஞா் உதயசங்கா் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

SCROLL FOR NEXT