திண்டுக்கல்

காட்டு யானைகளால் சவ்சவ் தோட்டம் சேதம்

DIN

திண்டுக்கல்: ஆடலூா் அருகே சவ்சவ் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், கொடிகள் மற்றும் பந்தல் முழுவதையும் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆடலூா் சுற்றுப்புற காடுகளில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆடலூரை அடுத்துள்ள ஆடியஞ்சோலை பகுதியிலுள்ள சவ் சவ் தோட்டத்திற்குள் வியாழக்கிழமை இரவு 2 யானைகள் புகுந்தன. அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலி மற்றும் கொடிகள் முழுவதையும் அவைகள் சேதப்படுத்தின. இதுகுறித்து அந்த தோட்டத்தை குத்தைக்கு எடுத்து நடத்தி வரும் சித்தரேவு பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மற்றும் பெத்தாா் ஆகிய இருவரும், கன்னிவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு சென்று சம்பந்தப்பட்ட தோட்டத்தை பாா்வையிட்ட கன்னிவாடி வனத்துறையினா், சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இருப்பினும் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT