திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே பூசாரி குடும்பத்தினரை கட்டிப்போட்டு 100 பவுன் நகை கொள்ளை: 5 பேர் சிக்கினர்

DIN

திண்டுக்கல் அருகே பூசாரி வீட்டில் கொள்ளையடித்து தப்பி சென்ற 5 கொள்ளையர்களை பொன்னமராவதி அருகே காவல்துறையினர் பிடித்து அவர்களிடமிருந்து சுமார் 100 பவுன் நகை மற்றும் 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இரு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சுக்காம்பட்டி சிவன்கோயில் பூசாரி துரைஆதித்தன். இவரது வீட்டில் இருந்தவர்களை மர்மநபர்கள் ஆயுதங்களால்  தாக்கி 100 பவுன் நகை மற்றும் 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்த திண்டுக்கல் காவல்துறையினர் காரில் தப்பி சென்ற கொள்ளையர்களை விரட்டி வந்துள்ளனர். மதுரைமாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அக்கொள்ளையர்கள் தப்பி வருவதாக கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனையடுத்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் கொள்ளையர்களை பின் தொடர்ந்து விரட்டி வந்துள்ளனர். தொடர்ந்து சிவகங்கை பகுதியில் கொள்ளையர்கள் சென்ற போது சிவகங்கை காவல்துறையினர் விரட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட எல்கைப்பகுதியில் வந்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்ஷக்திகுமார் தலைமையில் மாவட்டத்திற்குள்ப்பட்ட அதிகாரிகள் பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் ஊராட்சி தச்சம்பட்டி-குமாரபட்டி காட்டுப்பகுதியில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தச்சம்பட்டி காட்டுப்பகுதியில் ஒரு கார் நின்றது. அதனைக்கண்டு கொள்ளையர்கள் இப்பகுதியில் தான் இருப்பார்கள் என தேடுதலை தீவிரப்படுத்தினர். அப்போது காவலர் பிரபாகரன் கையில் கத்தியுடன் ஒடிய கொள்ளையனை மடக்கி பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி, காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன், நெற்குப்பை காவலர் முருகன், எஸ்வி மங்கலம் காவலர் சதாம் உசேன் மற்றும் திருக்களம்பூரை சார்ந்த இளைஞர்கள் சிவகங்கை, பரமக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சார்ந்த அஜீத், செல்லப்பாண்டி, கல்யாணசுந்தர், சந்தோஷ், கலைஞானம் ஆகிய கொள்ளையர்களை  விரட்டிப்பிடித்துள்ளனர்.

இதனையடுத்து கொள்ளையர்கள் பயன்படுத்திய பதிவுஎண் இல்லாத காரினை பறிமுதல் செய்து அதிலிருந்த 150 பவுன் நகை, 35 லட்சம் ரொக்கம் மற்றும் அரிவாள்,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து 5 கொள்ளையர்கள் மற்றும் கைபற்றப்பட்ட பொருள்களை பொன்னமராவதி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் அதிகாரிகள் வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

இச்சம்பவம் பொன்னமராவதி மேலும் இது குறித்து புதுக்கோட்டை எஸ்பி அருண்ஷக்திகுமார் கூறியதாவது, இக்கொள்ளையர்களை பிடித்த காவல்துறை நண்பர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பிடிபட்ட 5 கொள்ளையர்கள் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT