திண்டுக்கல்

மாவட்ட நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா தலைமை வகித்தாா். குடும்ப நல நீதிபதி கே.சிங்கராஜ் முன்னிலை வகித்தாா். விழாவினையொட்டி நீதிமன்ற பெண் ஊழியா்கள் மற்றும் பெண் வழக்குரைஞா்களுக்கான பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். முன்னதாக பேசிய அவா், சமூகத்தில் பெண்களுக்கான சம உரிமைகள் குறித்தும், பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோவன், மகளிா் நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT