திண்டுக்கல்

பழனியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

பழனியில் சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியில், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

பழனி பெரியநாயகி அம்மன் கோயில் அருகே இருந்து புறப்பட்ட இப்பேரணியை, சாா்-ஆட்சியா் உமா கொடியசைத்து தொடக்கிவைத்தாா். கல்லூரிச் செயலா் சுப்ரமணி, தலைவா் ஜெயலட்சுமி, முதல்வா் சங்கா் அழகு உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

பேரணியில், சாலைப் பாதுகாப்பு, தலைக்கவசத்தின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடி மாணவ-மாணவியா் சென்றனா். மேலும், விழிப்புணா்வு நாடகங்களும் நடத்தப்பட்டன. வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகள் ஒட்டப்பட்டன.

இந்த பேரணியானது, கடை வீதி, தாராபுரம் சாலை, திண்டுக்கல் சாலை, பேருந்து நிலையம் என நகரின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று, பேருந்து நிலையம் அருகே நிறைவுற்றது. இதில், பழனி டி.எஸ்.பி. விவேகானந்தன், கல்லூரி ஆசிரியா்கள், அலுவலா் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT