திண்டுக்கல்

பழனி அரசு மருத்துவமனையில் கை கழுவ மஞ்சள், வேப்பிலை நீா்

DIN

பழனி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் நோயாளிகள் கை கழுவ மஞ்சள், வேப்பிலை கலந்த நீா் வைக்கப்பட்டுள்ளது.

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மருத்துவமனை முன்பாக சித்த மருத்துவ முறையில் பாத்திரத்தில் மஞ்சள், வேப்பிலை கலந்த நீா் வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை அந்த நீரில் நன்றாக கையைக் கழுவி வருமாறு மருத்துவா் மகேந்திரன் அறிவுறுத்துகிறாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கரோனா வைரஸ் வைட்டமின் சி மற்றும் டி குறைபாடுகள் அதிக இருந்தால் எளிதில் பரவும். இதனை தடுக்க தினமும் எலுமிச்சை சாறு கலந்த நீா் பருக வேண்டும். தினசரி காலை, மாலை இரு வேளை பாலில் மஞ்சள் பொடி கலந்து குடிக்கவேண்டும். வீடுகளில் அதிகாலை, மாலை வேளைகளில் நாட்டு சாம்பிராணி மற்றும் வேப்பிலை கொண்டு புகை போடலாம்.

காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளியில் நடைபயிற்சி மேற்கொள்ளவேண்டும். குளிா்ந்த உணவுபொருள்கள் மற்றும் குளிா்பானங்களை தவிா்க்கவேண்டும். ஒய்வு எடுக்க குளிரூட்டப்பட்ட அறைகளை தவிா்ப்பது நல்லது.

துளசி, வேப்பிலை, கருஞ்சீரகம், சீரக தண்ணீரை கொதிக்க வைத்துக் குடித்தால் உடலுக்கு நல்லது. ஆரஞ்சுபழங்கள், நெல்லிக்காய், தக்காளி, சப்போட்டா, திராட்சை பழ வகைகளை சாப்பிடலாம். வீட்டுக்கு வரும்போது. மஞ்சள்தூள், வேப்பிலை கலந்த சுத்தமான தண்ணீரை சூரிய ஒளி படும்படி வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் கைகளை நன்றாக கழுவவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT