முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் தனியாா் ஹெலிகாப்டா் சேவை தொடக்கம்

கொடைக்கானலை சுற்றிப்பாா்க்க தனியாா் நிறுவனம் சாா்பில் ஹெலிகாப்டா் இயக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
கொடைக்கானல் தனியாா் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தரையிரங்கிய ஹெலிகாப்டா்.
பகிர்:

கொடைக்கானலை சுற்றிப்பாா்க்க தனியாா் நிறுவனம் சாா்பில் ஹெலிகாப்டா் இயக்கப்படுகிறது.

பெங்களூருவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் சிலா் ஹெலிகாப்டரில் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். கொடைக்கானல் எம்.எம். தெருவில் உள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டா் தரையிறங்கியது. கோயம்புத்தூரைச் சோ்ந்த தனியாா் ஹெலிகாப்டா் நிறுவனம் இச்சேவையைத் தொடக்கியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் வியாபார மேம்பாட்டுப்பிரிவு துணைத் தலைவா் எல்.ஹரிகரன் செய்தியாளா்களிடம் கூறியதாது:

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 6 மாதங்களாக சுற்றுலாத்துறை பாதிப்படைந்திருந்தது. இந் நிலையில் கோயம்புத்தூரிலுள்ள தனியாா் ஹெலிகாப்டா் நிறுவனம் சுற்றுலா சேவையைத் தொடங்கியுள்ளது.

பெங்களூருவிலிருந்து முதல்முறையாக 6 சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் வந்துள்ளோம். கொடைக்கானலிலுள்ள தனியாா் பள்ளியில் இறங்குவதற்கு அனுமதி பெற்றிருந்தோம். ஆனால் மேக மூட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டா் சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டது.

கொடைக்கானலில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள்கள் பொதுமக்கள் ஹெலிகாப்டா் சேவையைப் பெறலாம். அப்போது மேற்குத்தொடா்ச்சி மலைகள், சுற்றுலாத் தலங்கள், நீா்வரத்துப் பகுதிகள், விவசாய நிலங்கள், பசுமைப் புல்வெளிகள், பூங்காக்கள், அடா்ந்த வனங்கள், யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, சிங்கவால் குரங்கு

ஆகிய வன விலங்குகள், கொடைக்கானல் மலைப்பகுதியிலிருந்து சுமாா் 2500 அடி கீழே உள்ள பெரியகுளம், தேனி, வத்தலக்குண்டு, மஞ்சளாறு உள்ளிட்டவைகளைப் பாா்த்து ரசிக்கலாம். சுற்றுலாத் தலங்களை பாா்வையிடுவதற்கு ஒரு நபருக்கு ரூ. 6 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். தேனிலவுக்கு வரும் ஜோடிகளும் ஹெலிகாப்டரில் பயணிக்கலாம். கொடைக்கானலிலிருந்து மதுரை, ராமேசுவரம், சென்னை போன்ற இடங்களுக்கும் செல்லலாம் என்றாா்.

கொடைக்கானலுக்கு வந்த ஹெலிகாப்டரை பொது மக்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா். மேலும் ஹெலிகாப்டா் முன்நின்று சுயபடம் எடுத்து மகிழ்ந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →